சைவ உணவால் ஏற்படும் நன்மைகள்

நம் வாழ்நாளில் சைவ உணவை மட்டும் உண்பதன் மூலம் பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான மக்கள் அசைவ உணவும் உண்டால் தான் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும் என்று எண்ணுகின்றனர். ஆனால், அது தவறான எண்ணம். இங்கு சைவ உணவால் மட்டும் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம். 

உடல் எடையை எளிதாக குறைக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையை குறைத்து கச்சிதமான உடல் அமைப்பை பெற விரும்புகின்றனர். 

சைவ உணவை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். எனினும், தினமும் நாம் உண்ணும் சைவ உணவின் அளவையும் கட்டுப்படுத்த வேண்டும். சைவ உணவையும் அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் எடை குறைப்பு என்பது சற்று கடினமான விஷயம் தான். அளவான சைவ உணவை உண்டு நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் பல் வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். 

காய்கறிகள் 

நாம் அன்றாடம் காய்கறிகளை நன்றாக உண்ண வேண்டும்

இதன் மூலம் பரம்பரையாக வரக்கூடிய இதய நோய், நீரிழிவு  இரத்த அழுத்தம், உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் போன்ற நோய்களை தடுத்து.  நம் வாழ்நாளை நீட்டித்துக்  கொள்ள முடியும். 

சைவ உணவில் எல்லா சத்துக்களும் உள்ளன

சைவ உணவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எல்லா சத்துக்களும் உள்ளன. ஒரு சிலர் சைவ உணவில் குறைந்த அளவு புரதம் உள்ளது என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால், சைவ உணவு வகைகளிலும் தேவையான அளவு புரதச் சத்து உள்ளது. பயறு வகைகள், பால், சோயா, பாதாம், போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது. 

இவற்றை நாம் அன்றாட உணவில் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத்தை பெற முடியும். 

புரதசத்து மட்டுமில்லாமல் முக்கிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் சைவ உணவு வகைகளில் நிறைய உள்ளன. கேரட், முட்டைக்கோசு, கீரை வகைகளில் விட்டமின் 'ஏ' நிறைய உள்ளது. திராட்சை, அன்னாசி, வாழை, சாத்துக்குடி, ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்களில் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் புரத சத்துகள் உள்ளன. 

விட்டமின் 'சி'

நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் விட்டமின் 'சி' முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டமின் 'சி' சைவ உணவில் தான் உள்ளது. சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்றவற்றிலும் சமையலுக்கு பயன்படும் தக்காளி, புளி போன்ற வற்றில் அதிகம் உள்ளது. 

ழ்ழ்தக்காளி சூப், தக்காளி குருமா, புளி சாதம், எலுமிச்சை ஊறுகாய், சாத்துக்குடி ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் 'சி' பற்றாக்குறையை தவிர்க்க முடியும்

இரும்புச்சத்து சைவ உணவிலும் கிடைக்கிறது

பெரும்பாலான மக்கள் சைவ உணவில் இரும்பு சத்து குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. 

உண்மையில் பல சைவ உணவு வகைகளில் இரும்பு சத்து நிறைய உள்ளது. அன்றாடம் சமையலுக்கு பயன்படும் புளியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. பேரீச்சம் பழத்தைப் போலவே  புளியிலும் போதுமான அளவுஇரும்பு ச் சத்து இருக்கிறது. உண்மையில் சுத்த சைவ உணவு உண்பவர் களுக்கு புளியே ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. 

சுகமான ஆழ்ந்த உறக்கம்

இரவில் சுகமான ஆழ்ந்த உறக்கம் இருந்தால் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும். இரவில் உறங்குவதற்கு  முன் மிதமான சைவ உணவு உண்ணும் பழக்கம் வைத்து க் கொண்டால் தினமும் இரவில் நிம்மதியாக தூங்கலாம். ஆனால், ஒரு சிலர் இரவிலும் தகாத உணவு களை உண்டு உறக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். காரணம் இயற்கை யாகவே சைவச் சாப்பாடு எளிதில் ஜீரணிப்பதால் உறக்கம் தடையில்லாமல் நன்றாக வரும். 

உடற்பயிற்சியாளர்களுக்கு ஏற்ற உணவு

வாழ்நாளில் சைவ உணவு மட்டும் எடுத்துக் கொண்டால் உடற்பயிற்சியாளர் களுக்கு மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். சைவ உணவிலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் இருப்பதால் உடல் பயிற்சியாளர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் நன்றாக செயல் படும் என்பதால் உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் மிகச் சிறந்த பலன்களை எதிர்பார்க்க முடியும். 

புரதம் அதிகமானால் ஆபத்து

சைவ உணவை விட மாமிச உணவில் அதிக புரதம் உள்ளது. இதனால், உணவு பிரியர்கள் மாமிசத்தை அதிகம் உண்ணும் போது ஜீரணமாகும் புரத த்திலிருந்து யூரியா வெளியேறுகிறது. இதனால் சிறுநீரகம், கல்லீரல் குடல் போன்ற உள் உறுப்புகள் பாதிப்பு அடையும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஜீரணமாகும் புரதம் கொழுப்பாக மாறுவதால் உடல் எடை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. கேன்சர் நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

நீடிக்கும் இளமை

சைவ உணவு உண்பவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானாலும் இளமையான தோற்றம் உடையவர்களாக இருக்கிறார்கள். இது, சைவ உணவை கடைப் பிடிப்பதால் கிடைக்கும் மிகச்சிறந்த பலன். உலகில் உள்ள அனைவரும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கவே விரும்புகிறார்கள். சைவ உணவால் கிடைக்கும் நிம்மதியான உறக்கம், பாதிப்பு அடையாத உள்ளுறுப்புகள் இளமை தோற்றத்திற்கு காரணமாகிறது. 

நீரிழிவு உள்ளவர்களுக்கு சைவ உணவு சிறந்தது

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு சைவ உணவு மிகச்சிறந்த தேர்வாகும். சைவ உணவை கடைப்பிடிக்கும் போது சிறுநீரகம், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. நீரிழிவு உள்ளவர்கள் அசைவ உணவை அடிக்கடி உண்டால் சிறுநீரகம், இதயம் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைந்து அவர்களுடைய ஆரோக்கியம் கடுமையாக பாதிப்பு அடைகிறது. இதன் காரணமாக நீரிழிவு உள்ளவர்கள் அசைவ உணவை தவிர்க்க வேண்டியதாகிறது. 

சைவ உணவாக இருந்தாலும் அளவு முக்கியம்

சைவ உணவு உடலுக்கு ஆரோக்கியம் என்று சொன்னாலும். அதையும் நாம் அளவாக உண்டால் தான் நல்ல பலன்களை பெற முடியும். சாதமானாலும், காய்கறி பழங்கள் என்றாலும் நம் வயதிற்கு ஏற்றாற் போல் அளவாக உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்டால் சைவ உணவாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பு அடையும். குறிப்பாக கீரை, நெய், தயிர், விதவிதமான காய்கறிகள் போன்றவற்றை இரவு உணவில் தவிர்க்க வேண்டியது அவசியம். 

Comments