இன்றைய எந்திர வாழ்க்கை முறையில் மூட்டு வலி (Arthritis) வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் வரக்கூடிய பிரச்சனையாக உள்ளது.
ஒரு காலத்தில் இப் பிரச்சனை 65 வயதினை தாண்டி யவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய தாக இருந்தது. ஆனால், இன்றைய நவீன இயந்திர வாழ்க்கை முறையில் 40 வயதினரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது?
கை, கால், இடுப்பு எலும்புகள் இணையும் மூட்டு பகுதிகளில் எலும்புகளின் சீரான, பாதுகாப்பான இயக்கத்திற்காக கார்டிலேஜ் (Cartilage) எனப்படும் மென்மையான திசு அமைப்பு உள்ளது.
இதனுடன் சினோவியல் ஜவ்வு (Synovial Membrane) உற்பத்தி செய்யும் திரவமானது மோட்டார் போன்ற இயந்திர பாகங்களில் பயன்படும் ஆயில் அல்லது கிரீஸ் போல செயல்பட்டு மூட்டுகள் பிரச்சனை இல்லாமல் இயங்க உதவுகிறது.
மூட்டுகளுக்கு இடையே உள்ள மென்மையான திசு அமைப்பில் திரவ பற்றாக்குறை காரணமாக உராய்வு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் போது மூட்டு வலி உண்டாகிறது. மூட்டுகளில் அழற்சி காரணமாகவும் கார்டிலேஜ் பாதிப்பு அடைந்து வலி உண்டாகிறது.
மூட்டு வலி ஏற்பட உடலியல் காரணங்கள்
உடல் பருமன்
உயரத்திற்கு தகுந்த எடை இல்லாமல் அளவுக்கு அதிகமான உடல் எடை (obesity) இப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒரு சிலர் அதிக அளவில் உணவு உட் கொள்வதன் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு இப் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.
உடல் பயிற்சி இன்மை
இன்றைய எந்திர வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு மற்றும் உடல் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. இதன் காரணமாகவும் பெரும்பாலான மக்களின் உடல் பருமன் அதிகரித்து இப்பிரச்சனை உண்டாகிறது.
பாரம்பரிய உணவுப் பழக்கம்
உணவினை தரையில் உட்கார்ந்து உண்ணும் பழக்கம் தென்னிந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், ஒரு சில வீடுகளில் டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும் பழக்கம் இருப்பதால் இப் பிரச்சனை ஏற்படுகிறது.
கெட்ட பழக்கங்கள்
சிகரெட், மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையான வர்களுக்கு மூட்டு வலி பிரச்சனை வந்து விடுகிறது. கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டு அளவான உணவு, மிதமான உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை கடைபிடித்தால் மூட்டு வலியினை தவிர்க்கலாம்.
மாதவிடாய் நிற்கும் காலம்
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதை தவிர்க்க விட்டமின் டி நிறைந்த சத்துணவு, யோகா போன்ற விஷயங்களை கடைப்பிடிக்கலாம்.
பரம்பரையாக வரும் பிரச்சனை
மூட்டு வலி ஒரு சிலருக்கு பரம்பரையாகவும் ஏற்படுகிறது. அது போன்ற சூழலில் ஆரோக்கியமான உணவு முறை, சரியான உடல் பயிற்சி, நல்ல பழக்கம், மருந்துகள் போன்றவற்றால் பிரச்சனைகளில் இருந்து மீளலாம்.
அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு
அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு மற்றும் பயிற்சி போன்றவையும் மூட்டு வலிக்கு காரணங்கள் ஆகின்றன. இதனால் மூட்டு எலும்புகளுக்கு இடையே உள்ள கார்டிலேஜ் தேய்மானம் ஆகி வலி ஏற்படுகிறது.
பல வகையான மூட்டு வலிகள்
ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் (Osteo Arthritis) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவ்வகை மூட்டு வலியானது அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு, விளையாட்டில் ஈடுபாடு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. அதிக உழைப்பின் காரணமாக மூட்டு எலும்புகளை சுற்றியுள்ள மென்மையான (cartilage) திசுக்கள் சேதம் அடைவதால் இந்நிலை உருவாகிறது.
ஆங்கிலோஸிங் ஸ்பாண்டிலிட்டிஸ் (Ankylosing Spondylitis) என அழைக்கப்படும் இவ்வகை மூட்டு வலி முதுகின் கீழ்ப்பகுதியில் உள்ள தண்டுவட பகுதியில் ஏற்படுகிறது.
அடுத்ததாக ஜீவனைல்ஆர்த்ரிடிஸ் (Juvenile Arthritis) எனப்படுவது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மூட்டுகளின் மென் திசுக்களை பாதிக்கும் போது ஏற்படும். 16 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு இப் பிரச்சனை வருவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
கவுட் (Gout)என்றழைக்கப்படும் நிலையில் மூட்டு களுக்கு இடையே யூரிக் அமில படிகங்கள் உருவாவதால் வலி உண்டாகிறது.
சோரியாடிக் ஆர்த்ரிடிஸ் (Psoriatic Arthritis) என்பது சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகிறது.
ரெமடாய்ட் ஆர்த்ரிடிஸ் (Rheumatoid Arthritis) என்ற நிலை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது மூட்டுகளின் மென் திசுக்களை பாதிப்பதால் ஏற்படுகிறது. முப்பது வயதினை தாண்டியவர்களுக்கு நாட்பட்ட பிரச்சனையாக இது உள்ளது.
மூட்டு வலிக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள்
குளுகோஸமின்
இது மூட்டு எலும்புகளுக்கு இடையே உள்ள கார்டிலேஜ் (Cartilage) எனப்படும் மென்மையான திசு சேதம் அடைவதை தடுக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் விரிப்பு தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றை குறைக்கிறது. இந்த மருந்து கேப்சூல்களாகவும், மாத்திரை களாகவும், திரவ வடிவிலும் கடைகளில் கிடைக்கிறது.
சான்ட்ராய்டின்
சான்ட்ராய்டின் (chondroitin) என்று அழைக்கப்படும் இந்த மருந்து கார்டிலேஜ் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது. மூட்டுகளுக்கு இடையே கலோஜலன் எனப்படும் புரதப் பொருள் உற்பத்தியினை ஊக்குவிக்கிறது. அதிர்வுகளில் இருந்து காத்து மென்மையான இயக்கத்திற்கு உதவுகிறது.
மீன் எண்ணெய் மாத்திரை
புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களால் ஏற்படும் அழற்சியிலிருந்து மூட்டு எலும்புகளை காக்கிறது. இவை புரதத்தை உடம்புக்கு அழற்சி ஏற்படுத்தாத ரிசால்வின் என்ற கெமிக்கல்களாக மாற்றுகிறது.
மீதைல்சல்போனைல்மீதேன்
இந்த கந்தக வேதிப்பொருள் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றில் இயற்கையாக உள்ளன. இது மூட்டுகளை இணக்கும் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த மருந்தினை தினசரி 1000 மி. கி., 3000 மி. கி., என்ற அளவில் உட்கொண்டால் மூட்டு வலி பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
விட்டமின் 'டி'
மூட்டு வலியை குணமாக்குவதில் விட்டமின் 'டி' முக்கிய பங்கு வகிக்கிறது. 'ரெமடாய்ட் ஆர்த்ரிடிஸ்' எனப்படும் நாட்பட்ட மூட்டு வலி இந்த விட்டமின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. இந்த விட்டமினை எடுத்து வரும் போது அது குணமாகிறது.
மஞ்சள்
பாரம்பரிய சித்த வைத்திய முறையில் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. மிகச் சிறந்த வலி நிவாரணி என்பதால் மூட்டு வலி சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கிறது. புரதப் பொருட்கள் மூலமாக ஏற்படும் மஞ்சள் சரி செய்கிறது. குறந்த அளவிலான சுத்தமான மஞ்சள் பொடியை நாம் அருந்தும் பாலில் சேர்த்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு, தேன்,
வெந்நீர் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் இவை இரண்டையும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும் வாய்ப்பு உள்ளது.
நீரில் ஊற வைத்த கருப்பு எள்
ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளில் இரவு முழுவதும் ஊறவைத்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.
வெந்தயம், சீரகம், மிளகு
வெந்தயம் 2 பங்கு, சீரகம் 1 பங்கு, மிளகு 0.5 பங்கு என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும் என்று சொல்கிறார்கள். இம் மூன்று பொருட்களிலும் மக்னீசியம் மற்றும் கால்சியம் இருப்பதால் மூட்டுகளில் ஏற்படும் அழற்சி குறைந்து மூட்டு வலி குணமடைவதாக சித்த வைத்தியம் கூறுகிறது.
Comments
Post a Comment