e |
நண்பர்களே, இப்பக்கத்தில் ஒரு காலத்தில் பிரபலமான, பலராலும் மிகவும் விரும்பப்பட்ட ‛ரோட் ரேஷ்’ விளையாட்டினை ஆன்லைனில் எப்படி இலவசமாக பதிவிறக்கம் செய்வது என்பதையும் அதை தற்போதுள்ள ‛விண்டோஸ் எக்ஸ்பி, செவன் மற்றும் டென்’ ‛ஓஎஸ்’ களில் எப்படி விளையாடுவது என்பதையும் பார்க்கலாம்
| road rash game |
ரோட் ரேஷ் பற்றி ஒரு சில வரிகள்
அதற்கு முன்பாக ‛ரோட் ரேஷ்’ விளையாட்டினை பற்றி ஒரு சில விஷயங்களை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
‛ரோட் ரேஷ் கேம்’ (Road Rash Game) இந்த விளையாட்டினை 90 கிட்ஸ் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. இது 1996ம் வருடம் ‛எலக்ட்ரானிக்ஸ் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பொழுது போக்கிற்காக 90களில் விரும்பி விளையாடினார்கள். இந்த விளையாட்டினை ‛தி சிட்டி’, ‛பெனின்சுலா’, ‛சியரா நிவேடா’, ‛தி நாபா வேலி’ மற்றும் ‛தி பசிபிக் ஹைவே’ என ஐந்து விதமான பகுதிகளில் விளையாடி மகிழலாம். நம்முடன் சேர்ந்து 14 போட்டியாளர்கள் இருப்பார்கள். ரேஸில் வெற்றி பெற முதல் மூன்று இடத்திற்குள் வரவேண்டும்.
மூன்று வகையான மோட்கள்
இவ்விளையாட்டினை, ‛திராஷ் மோட்’, ‛பிக் கேம் மோட்’, மற்றும் ‛மனோ ஏ மனோ’ என மூன்று வகைகளாக விளையாடலாம். திராஷ் மோடில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கேம் லெவல்களில் விளையாடலாம். இரண்டாவதாக உள்ள பிக் கேம் மோடில் நமக்கு பிடித்த கேரக்டரை நாமே தேர்வு செய்யலாம், மேலும் கேம் கேஷ் மூலமாக மேம்படுத்தப்பட்ட பைக்கினையும் தேர்வு செய்யலாம். மனோ ஏ மனோ என்ற மோடில் ஆன்லைன் மூலமாக மற்றொரு நபருடன் சேர்ந்து விளையாடலாம்.
‛ரோட் ரேஷ்’ விளையாட்டு அனைவருக்கும் திரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கக் கூடியது. விளையாட்டில் காணப்படும் 14 போட்டியாளர்களும் நம்மை முந்த விடாமல் செய்வதற்காக வன்முறை செயல்களில் ஈடுபடுவார்கள், நாமும், ‛என்டர்’ மற்றும் ‛ஸ்பேஸ்’ பட்டன்களை அழுத்தி போட்டியாளர்களை வீழ்த்தலாம்.
கேம் லெவலை கூட்டுவதற்கு ‛திராஷ் மோடில்’, ‛ரெஸ்ட் ரூம்’ கிளிக் செய்து நாம் விரும்பிய ‛கேம் லெவலை’ தேர்வு செய்து கொள்ளலாம். கூடுதல் கேம் லெவலை தேர்வு செய்யும் பட்சத்தில் நாம் விளையாட்டில் வெற்றி பெறுவது சற்று கடினமாகவே இருக்கும்.
விளையாடும் போது ஒரு நிஜ உலகில் நாம் பைக்கினை வேகமாக ஓட்டிச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நமக்கு எதிரே பல கார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவற்றின் மீது மோதி விடாமல் கவனமாக செல்ல வேண்டும். ஒரு வேளை காரின் மீது மோதி விழுந்து விட்டால், போட்டியாளர்கள் நம்மை எளிதில் முந்தி விடுவார்கள். அது திரில்லங்கான அனுபவத்தை கொடுக்கும்
எப்படி ரோட் ரேஷினை பதிவிறக்கம் செய்வது!
1.இங்கு காணப்படும் லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் ரோட் ரேஷ் பைல்களை நீங்கள் தங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கலாம். பின் பதிவு செய்யப்பட்ட பைல்களில் (Road Rash.exe) ஒன்றை கிளிக் செய்து கேம் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
2. ‛Road Ras.bat’ என்ற பைலினை காப்பி செய்ய வேண்டும். பின்பு அதை ‛இன்ஸ்டாலேஷன் டிரக்டரியில்’ பேஸ்ட் செய்ய வேண்டும்.
3. இப்போது ‛இன்ஸ்டாலேஷன் டிரக்டரி’யை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம். மை கம்ப்யூட்டரை கிளிக் செய்து ‛ரோட் ரேஷ்’ போல்டரில் ‛Road Ras.bat’ பேஸ்ட் செய்ய வேண்டும். அதற்கான வழிமுறை..
‛My Computer > Drive C > Program Files > CGN > Road Rash’
4. இப்போது ‛ ரோட் ரேஷ் டெஸ்டாப் ஐகானை’ ஓபன் செய்தால் ‛could not find any CD-ROM‛ என்ற பாப் அப் விண்டோ ஓபன் ஆகும்.
5. இதை சரி செய்ய ‛அல்ட்ரா ஐஎஸ்ஓ’ என்பதை கூகுளில் இலவசமாக பெற்று இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதன் மூலம் ரோட் ரேஷ் விளையாட்டிற்கான விர்ச்சுவல் டிஸ்கினை பெறலாம்.
6.‛அல்ட்ரா ஐஎஸ்ஓ’ என்பதை ஓபன் செய்து அதில் ‛சி’ டிரைவினை கிளிக் செய்து ‛ரோட் ரேஷ்’ போல்டர் வரை போக வேண்டும். அதற்கான வழிமுறை..
Drive C > Program Files > CGN > Road Rash’
7. அடுத்து ‛ரோட் ரேஷினை’ செலக்ட் செய்ய வேண்டும். அவ்வளவு தான். இப்போது உங்களுடைய மை கம்ப்யூட்டரில் ‛ரோட் ரேஷ் விர்ச்சுவல் டிரைவ்’ தோன்றும்
8. இப்போது ‛ரோட் ரேஷ் ஐகானை’ ஓபன் செய்து விளையாட்டினை தொடரலாம். இருப்பினும் கலர் பிரச்னை வரும், அதை சரி செய்ய ‛மை கம்ப்யூட்டரில்’ ‛சிஜிஎன்’னில் உள்ள ‛ரோட் ரேஷ்.பாட்’ னை ஓபன் செய்து ஏதாவது ஒரு கீயை அழுத்தவும். இப்போது கலர் பிரச்னை இல்லாமல் ‛ரோட் ரேஷ்’ விளையாட்டினை மகிழ்ச்சியுடன் தொடங்கலாம்.
Comments
Post a Comment