நண்பர்களே, அனைவருக்கும் வணக்கம்.
இங்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள விஷயம் அதி அற்புதமானது. அதனால் நிறைய எழுத விரும்புகிறேன்.
இதோ அந்த ரகசியம்.
நம் அன்றாட வாழ்க்கையை காலம் தான் ஆட்டி படைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தினசரி வாழ்க்கையில் ஒரு சில நாட்களில் சிறிதளவாவது மன உளைச்சலுக்கு ஆளாகி வருவோம். இதில் கடைசி குடிமகனிலிருந்து நம் ஜனாதிபதி வரை விலக்கல்ல.
| கடிகாரம் |
அவை எந்த நாட்கள்
ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29 தேதிகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அந்த தேதிகளில் அல்லது அதையொட்டிய தேதிகளில் அதிக டென்சன், உடல்நலம் பாதிப்பு, வாக்குவாதம், சிறு விபத்துகள் ஏற்படலாம். மற்ற தேதிகளில் எதுவும் நடக்காதா என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால், என் அனுபவத்தில் வீடு களில் ஏற்படும் சிறிய வாய்ச் சண்டை முதல் உலகையே உலுக்கும் விஷயங்கள் வரை நான் முதலில் குறிப்பிட்ட தேதிகளில் நடந்துள்ளன. மிக கொடுமையான விபத்துகள் கூட அந்த தேதிகளில் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
உலகின் கொடுமையான நிகழ்வுகள்
எனக்கு தெரிந்த நிகழ்வுகள்: செப்டம்பர் 11, 2001 அன்று இரட்டை கோபுர தாக்குதல் அதில் 3000கும் அதிகமானோர் இறந்தனர்., மார்ச் 11,2011 அன்று ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியை உலகம் மறக்காது, பிப்., 2, 2000 அன்று தர்மபுரி அருகே ஏற்பட்ட சம்பவத்தில் 3 கல்லூரி மாணவிகள் எரித்து கொல்லப்பட்டனர். மார்ச் 11, 2018ல் குரங்கனி காட்டுத்தீ யில் சிக்கி டிரெக்கிங் சென்ற 39 பேரில் 23 பேர் உடல் கருகி இறந்தனர். பிப்., 11,2007 அன்று நடந்த விபத்தில் சிக்கி என் தாய் உயிர் இழந்தார். இன்னும் எத்தனையோ.
அவை மிகவும் கெட்ட தேதிகளா?
சரி, 2, 11,20 தேதிகளை வெறுக்க தேவை இல்லை. அது சந்திரனுக்கு உரிய எண். இருப்பினும் அன்றைய தேதிகளில் நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் நமக்கு நல்லது.
அப்படி இருந்தால் என்னவாகும். நாம் ஏதாவது சிக்கலில் மாட்டு வதற்கு பதிலாக நமக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவர் விபத்தில் சிக்குவதையோ அல்லது சண்டையில் ஈடுபடுவதையோ நாம் பார்க்க நேரிடும். அப்படி நேரும் போது உங்களையும் அறியாமல் பாதிப்பு அடைபவர்கள் மீது அன்பு தோன்றும். அன்றைய தேதிகளில் உங்களுக்கு தெரிந்த உறவினர்கள் மூப்பு அல்லது நோய் காரணமாக மரணமடையலாம். அதன் காரணமாக நீங்கள் மன ரீதியாக வருத்தம் அடையலாம்.
விளையாடும் விதி
இந்நிலையில் விதி உங்களிடம் ஏமாந்து விடுகிறது. இருந்தாலும் அது விடாமல் உங்களை எந்த வகையிலாவது வருத்தப்பட வைக்க வேண்டும் என்று நினைத்து உங்கள் கண் முன்னே வேறு ஒரு அசம்பாவிதத்தை ஏற்படுத்துகிறது. விதி நினைத்தது போல் மற்றவர்கள் துன்பத்திற்காக சிறிது வருந்த ஆரம்பிக்கிறீர்கள். அதாவது, மறைமுகமாகவோ அல்லது நேரிடையாக வோ நீங்கள் மன வருத்தம் அடைகிறீர்கள்.
இப்போது இன்னும் ஒரு விஷயம். எனக்கு நீங்கள் ஒரு விடை கூற வேண்டும். ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பிரச்னையை சந்திப்பது சிறப்பா அல்லது தன் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் நிலையில் முன் பின் தெரியாதவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டு இரங்குவது சிறப்பா. இரண்டாவதாக கூறியது தான் சிறப்பு.
இவ்வாறு துளிர் விடும் அன்பு படிப்படியாக வளர்ந்து உங்களை மிகவும் பக்குவப்படுத்தி தியானம் வெற்றி அடைய உதவி செய்கிறது. ஒரு நிலையில் உங்களை பேரின்ப நிலைக்கு தள்ளி விடுகிறது.
30 வருட அனுபவம்
நண்பர்களே இந்த ரகசியத்தை சுமார் 30 வருடங்களுக்கு முன்பே உணர்ந்து விட்டேன். 100க்கும் அதிகமான அனுபவங்களை பெற்றுள்ளேன். மதுரையில் என் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளில் நான் இந்த ரகசியத்தை உணர்ந்துள்ளேன். ஆனால், என்னுடன் பணிபுரிபவர்களிடம் இது பற்றி எதுவும் பேச மாட்டேன். நானாக மனதில் சிரித்துக் கொள்வேன்
எனவே, புது அனுபவம் பெற தயாரா. இந்த நம்பிக்கை மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காக்கிறீர்கள், அது தான் உண்மை.
நான் ஒரு போதும் சிக்கலில் மாட்டியதே இல்லை,பிரச்னைகளில் மாட்டியதே இல்லை என்று நீங்கள் சொன்னால் உங்கள் மனம் பக்குவப்படும் வாய்ப்பை இன்னும் பெறவில்லை என்று அர்த்தம்.
Comments
Post a Comment