| Lord Shiva |
ஆன்மீகத்தில் ஆர்வமுடைய அனைவரிடமும் என் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சக்தி பெரியதா சிவன் பெரியதா என்று கேட்பது உடல் பெரியதா உயிர் பெரியதா என்று கேட்பதை போல் ஆகும்.
நம் உடம்பில் இடது கை முக்கியமா வலது கை முக்கியமா என்று கேட்க முடியுமா? வலது அல்லது இடது என்று கண்கள் மற்றும் கால்களில் பேதம் பார்க்க முடியுமா. இடம், வலம் என்ற இரண்டு விஷயங்களும் நம் வாழ்வில் இரண்டற கலந்தவை. அவற்றை பிரித்து பார்த்தால் நமக்கு வாழ்க்கை என்பதே இல்லை.
பஞ்ச பூத ரகசியம்
நமது அன்னை மகா சக்திக்கு இறைவன் சிவபெருமான் தனது திருமேனியில் இடப்புறத்தினை வழங்கி அருளியுள்ளார். அதற்கான ரகசியத்தை இங்கு கூறுகிறேன்.
அதற்கு முன்பு பஞ்ச பூத ரகசியத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன். பஞ்ச பூதங்களை நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்று வரிசை படுத்துவார்கள். அதற்கான காரணம் என்னவென்றால். பஞ்ச பூதங்களில் நிலம் தான் அடர்த்தியானது. அது பெண், உடல் போன்றவற்றுடன் தொடர்புடையது. அதனால் அது இடப்புறத்தினை பிடித்துள்ளது. இன்னும் விஞ்ஞான பூர்வமாக சொல்ல வேண்டுமானால் நாம் வாழும் பூமியில் எல்லாவற்றிற்கும் கீழாக அதாவது கடலுக்கும் கீழ் நிலம் உள்ளது. நண்பர்களே இங்கு 'கீழ்' என்பதை இடப்புறம் என்று பொருள் கொள்ள வேண்டும். நிலத்திற்கு மேல் புறம் அதாவது வலது பக்கத்தில் பெரும்பாலும் நீர் உள்ளது, அதாவது கடல் உள்ளது.
சரி, விஷயத்திற்கு வருவோம். நாம் வாழும் பூமி முழுதும் கடலாக இருந்தால் நெருப்பை நினைத்து பார்க்க முடியுமா. எனவே, நெருப்பு கடலுக்கு மேல் உள்ளது. அதாவது, நீருக்கு வலப்புறம் வருகிறது. இந்த நெருப்புக்கும் மேல் பெரும்பாலும் வாயு மண்டலம் உள்ளது. இவை எல்லாவற்றையும் கடந்து ஆகாயம் உள்ளது. இப்போது உங்களுக்கு பஞ்ச பூத ரகசியம் புரியும் என்று நினைக்கிறேன்.
இடம் வலமான வாழ்க்கை
நம் வாழ்வில் சில விஷயங்களை இடம் மற்றும் வலமாக பிரிப்போம்.
சக்தி; சிவன், இடம்; வலம், உடல்; உயிர், பெண்; ஆண், செல்வம்; ஆரோக்கியம், வேகம்; விவேகம், தியாகம்; இன்பம், துயரம்; இன்பம், தவம்; பேரின்பம், நிலம்; நீர், நீர்; நெருப்பு, ஓரம்; மையம், கீழ்; மேல் என்று சொல்லி கொண்டே போகலாம்.
இப்போது புரிகிறதா நண்பர்களே தியாகமே உருவான அன்னை அய்யனுக்கு இடப்புறம் அமைந்துள்ளார். அவருக்கு சிவன் வலப்புறம் அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஏனெனில் 'L' NEEDS MORE CONCENTRATION.
இப்போது நண்பர்களுக்கு ஒரு கேள்வி. பெரும்பாலும் திருமணத்திற்கு ஆணின் இடப்பக்கம் வருகிறார்கள். ஆனால், திருமண நாளன்று முகூர்த்த நேரத்தில் மட்டும் பெண்கள் ஆண்களுக்கு வலப்புறம் வருகிறார்கள். இதற்கான காரணம் தெரியுமா.
இதற்கான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.
Comments
Post a Comment