இன்றைய நாட்களில் ஸ்மார்ட் போன் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. பல் வேறு நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் போன்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. போன்களின் 'ஸ்பெக்ஸ்' எனப்படும் சிறப்பு அம்சங்களை பொறுத்து விலை மாறுபடுகிறது. போன்களின் பயன்பாடு, பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மக்கள் தங்களுடைய போன்களை தேர்வு செய்கின்றனர்.
போகோ எம்4 ப்ரோ
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த மாடல் போன் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் அழகான மஞ்சள், கூல் ப்ளூ, பவர் பிளாக் வண்ணங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த மாடலில் 'டைமென்ஸிடி' 810 என்ற பிராசஸர், 5000 mAh பேட்டரி உள்ளது. 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இருக்கிறது. 50 மெகா பிக்சல் எப்/1.8 கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இதில் AMOLED டிஸ்ப்ளே FHD 90 Hzல் 6.6 இன்ச் சைஸில் இருக்கிறது. ஸ்டோரேஜ் 125 ஜி. பி.,யாக உள்ளது.விலை ரூ 15,000 ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப். இ.,
நீண்ட நாட்களாக மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடலை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எப். இ., பாடலை விட பல சிறப்பு அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இந்த சாம்சங் மாடல் 'ஒன்பிளஸ் 9' போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
டைனமிக் AMOLED டிஸ்ப்ளே 2 எக்ஸ் திரையில் 6.4 இன்ச் சைஸில் கிடைக்கிறது. மெமரி ரேம் 8 ஜி. பி., ஆக இருக்கிறது. பின்பக்க 3 கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளது. 32 மெகா பிக்சல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 4500 mAh பேட்டரி உள்ளது. ஸ்டோரேஜ் 128 ஜி. பி., முதல் 256 ஜ. பி., யாக உள்ளது. பெரிய திரை களுடன் இணைப்பதற்கு வயர்லெஸ் டெக்ஸ் வசதியும் இருக்கிறது.
விவோ டி1
இதில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் இருக்கிறது. இது 5ஜி போன்ற அறிமுகம் ஆனாலும் இரண்டு பாண்ட்கள் மட்டுமே கிடைக்கும்.
பாடி கலர் மல்டி கலராக உள்ளது. 5000 mAh பேட்டரி உள்ளது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே இருக்கிறது. டிஸ்ப்ளே வசதி FHD 120 Hz 6.58 இன்ச் சைஸில் உள்ளது. ஆனால் AMOLED டிஸ்ப்ளே இல்லை.
4 ஜி. பி., ரேம், 6 ஜி. பி., ரேம் 8 ஜி. பி., ரேம் என 3 வேரியண்ட் களில் கிடைக்கிறது. ஸ்டோரேஜ் 128 ஜி. பி., யாக உள்ளது.இதன் எடை 180 கிராமமாக இருக்கிறது.
மோட்டோ ஜி71
மோட்டோரோலா மாடல் போன்களில் இது சமீபத்திய வெளியீடாக உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 695 உள்ளது. 5000 mAh பேட்டரி உள்ளது. 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. 13 பாண்ட்களில் 5 ஜி கிடைக்கிறது. 5ஜி அதிக பாண்ட்களில் கிடைப்பதால் கூடுதல் சிறப்பு அம்சமாக இருக்கிறது.
ஆண்ட்ராய்டு லெவல் 11 ஆக இருக்கும் இந்த மோட்டோரோலா மாடலில் AMOLED டிஸ்ப்ளே 6.4 இன்ச் சைஸில் கிடைத்தாலும் ரெப்ரஷ் ரேட் 60 Hz ல் மட்டுமே உள்ளது. ஆர்டிக் ப்ளூ, நெப்டியூன் கிரீன் என்று இரு வண்ணங்களில் கிடைக்கிறது. எடை 180 கிராமாக இருக்கிறது.
மெமரியை பொறுத்த வரை 6 ஜி. பி., ரேமிலும் ஸ்டோரேஜ் 128 ஜி. பி., யாகவும் உள்ளது. 700 நைட்ஸ் பிரைட்டன் இருப்பதால் கேம்கள் விளையாடும் போது நல்ல அனுபவத்தை கொடுக்கிறது.
ரியல்மி 9 ப்ரோ
இதனுடைய பாடி கலர் மல்டியாகவும் பளபளப்பாகவும் உள்ளது. சன்ரைஸ் ப்ளூ, அரோரா கிரீன், மிட்நைட் பிளாக் என்று மூன்று வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் இருக்கிறது. 5000 mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே FHD IPS LCD ஆக உள்ளது. ரெப்ரெஷ் ரேட் 120 Hz ஆக உள்ளது. சைஸ் 6.6 இன்சாக உள்ளது. பிரைட்டன் லெவல் 600 நைட்ஸ் என்ற அளவில் உள்ளதால் பகல் நேரத்திலும் உபயோகப் படுத்துவதற்கு வசதியாக உள்ளது.ரேம் சைஸ் 6 ஜி. பி., யாக உள்ளது. கேமரா 64 மெகா பிக்சலில் உள்ளது.
5ஜி போன்ற இருந்தாலும் 5 பாண்டகள் மட்டுமே சப்போர்ட் செய்கிறது. இந்த போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. முன்பக்க செல்பி கேமரா 16 மெகா பிக்சலிலும், பின்பக்க கேமரா 60 மெகா பிக்சலிலும் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் லெவல் 12 ஆக இருப்பது மற்றொரு சிறப்பு.
ரெட்மி நோட்11 ப்ரோ பிளஸ்
இந்த போன் சமீபத்தில் ரெட்மி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பல சிறப்பு அம்சங்களாலும், பட்ஜெட் விலையிலும் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் இந்நிறுவன போன்கள் பிரபலம் அடைந்துள்ளன.
இதில் AMOLED டிஸ்ப்ளே FHD+ 120 Hz ல் 6.67 இன்ச் சைஸில் கிடைக்கிறது. இதில் செல்பி கேமரா 16 மெகா பிக்சலில் உள்ளது என்றும் அதில் ஒரு சில குறைபாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் 7 5ஜி பாண்ட்கள் கிடைக்கிறது. பேட்டரி 5000 mAh ஆக உள்ளது. மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ரேம் 6 ஜி. பி. யிலிருந்து 8 ஜி. பி.,யாக உள்ளது. ஸ்டோரேஜ் 128 ஜ. பி.,யிலிருந்து 256 ஜி. பி., யாக இருக்கிறது. பின்பக்கமாக 108 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெகா பிக்சலில் அல்ட்ரா வைட் சென்சரும் உள்ளது. வண்ணம் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதால் வெளிப்புற படப்பிடிப்புக்கு உகந்த தாக உள்ளது. விலை சற்று அதிகமாக ரூ 21,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment