கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் பெரும்பாலான மக்களின் தினசரி பயன்பாட்டில் உள்ளது.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்களை நாமே அசெம்பிள் செய்வது எப்படி என்பதை இங்கு படிப்படியாக பார்க்கலாம். முதலில் கம்ப்யூட்டர் பாகங்களை பொருத்து வதற்கு தேவையான ஸ்க்ரு டிரைவர், டார்ச்லைட் போன்றவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். நாம் வேலை செய்வதற்கு ஏதுவாக சரியான உயரத்தில் உள்ள மேஜையை தேர்வு செய்து கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்ய தொடங்குவது நல்லது.

தேவையான கம்ப்யூட்டர் பாகங்கள்

ஒரு கம்ப்யூட்டரை அசெம்பிள் செய்வதற்கு சி.பி.யு., பாக்ஸ், மதர்போர்டு, சி. பி. யு.,, சி. பி. யு., கூலிங் ஃபேன், மின்சார சப்ளைக்கு தேவையான கனெக்டர்கள், மெமரி ராம், கிராபிக் கார்டுகள், ஸ்டோரேஜ் டிரைவ், ஆப்டிகல் டிரைவ், கேஸ் ஃபேன், முன் பக்க பேனல் கனெக்டர்கள் தேவைப்படும். இவை தவிர மவுஸ், மானிட்டர், கீ போர்டு, ஸ்பீக்கர்கள் போன்றவை வெளிப்புறமாக இணைக்கப்பட்ட வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அசெம்பிள் வேலையை துவங்கும் போது முன் அனுபவம் உள்ளவர் அருகில் இருப்பது நல்லது. ஒவ்வொரு பாகத்திற்கு ம் வழங்கப்பட்டுள்ள யூசர் மேனுவல் பொறுமையாக படித்து அவற்றை எங்கு இணைக்க வேண்டும் என்று தெரிந்து இருப்பது அவசியம்.

நம் உடலில் ஏற்படும் நிலை மின்சாரம் கம்ப்யூட்டர் பாகங்களை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் அதை நாமே சி. பி. யு., பாக்ஸினை தொடுவதன் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ அதை டிஸ்சார்ஜ் செய்துவிட வேண்டும். கத்தி போன்ற கம்ப்யூட்டரின் கூர்மையான பாகங்களால் நம் உடலில் காயம் ஏற்பட்டு விடாதபடி அவற்றை கவனமாக கையாள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இது போன்ற வேலைகளுக்கு மரத்தாலான மேஜையை பயன்படுத்துவது நல்லது.

கம்ப்யூட்டர் அசெம்பிள் எப்படி?

சி. பி. யு., பாக்ஸ் திறத்தல்

முதலில் கம்ப்யூட்டர் கேஸ் எனப்படும் சி. பி. யு., பாக்ஸில் பொருத்தப்பட்டுள்ள கருப்பு நிற ஸ்க்ரு ஆணிகளை கழற்றி பெட்டி யை பக்கவாட்டில் திறக்க வேண்டும்.

மதர்போர்டு

மதர்போர்டினை நிறுவுதல்

மதர்போர்டினை எடுத்து கம்ப்யூட்டர் பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரு ஸ்டேன்ட் ஆஃப் ஸ்க்ரு பாயிண்ட்கள் மீது வைத்து மற்ற இரு ஸ்க்ரு ஆணிகளால் அதை நிறுத்த வேண்டும்.

சி. பி. யு., பிராசஸரை பொருத்துதல்

இப்போது மதர்போர்டில் உள்ள சி. பி. யு., சாக்கெட்டினை திறந்து, அதனுள், சி. பி. யு., பிராசஸரை பக்கங்களை சரி பார்த்த பின் கவனமாக பொருத்த வேண்டும். அதன் பின் சாக்கெட் லிவரை கவனமாக மூடி விடவும்.

கூலிங் ஃபேன் பொருத்துதல்

சி. பி. யு., கூலிங் ஃபேனை அதனுள் பொருத்த வேண்டும். இப்போது சி. பி. யு., ஃபேனில் உள்ள பவர் கேபிளை மதர்போர்டு கனெக்டரில் இணைக்கவும்.

மின்சார சப்ளைக்கான கனெக்டர்களை இணத்தல்

மின்சார சப்ளைக்கான கனெக்டர்களை கம்ப்யூட்டர் பாக்ஸில் பொருத்தவும். பவர் சப்ளைக்கான பெரிய கேபிள் கனெக்டரை மதர்போர்டு பவர் கனெக்டருடன் இணைக்க வேண்டும். அதேபோல் 8 பின் களை கொண்ட பவர் கேபிள் கனெக்டரை சி. பி. யு., பவர் கனெக்டருடன் இணைக்க வேண்டும்.

மெமரி ராம் மற்றும் கிராபிக்ஸ் கார்டுகளை பொருத்துதல்

தங்களுடைய கம்ப்யூட்டருக்கு தேவையான மெமரி ராமினை அதற்குரிய ஸ்லாட்டில் கவனமாக பொருத்த வேண்டும். கிராபிக்ஸ் கார்டுகளை மதர்போர்டிற்கு கீழாக பொருத்த வேண்டும். பின்னர் பவர் கனெக்டர் கேபிளை கிராபிக்ஸ் கார்டு பவர் கனெக்டருடன் இணைக்கவும்.

ஸ்டோரேஜ் டிரைவ் நிறுவுதல்

இதையடுத்து ஸ்டோரேஜ் டிரைவினை அதற்கான இடத்தில் ஸ்க்ரு ஆணிகளைக் கொண்டு நிறுவவும். டிரைவினை மதர்போர்டுடன் எஸ். ஏ. டி. ஏ., கேபிள் மூலம் இணைக்க வேண்டும்.

ஆப்டிகல் டிரைவ் நிறுவுதல்

முன் பக்கத்தில் ஆப்டிகல் டிரைவினை ஸ்க்ரு ஆணிகளைக் கொண்டு அதற்குரிய இடத்தில் நிறுவ வேண்டும். ஆப்டிகல் டிரைவினை எஸ். ஏ. டி. ஏ., கேபிள் மூலமாக மதர்போர்டுடன் இணைக்கவும். பவர் கேபிள் கனெக்டரை ஆப்டிகல் டிரைவுடன் இணத்துக் கொள்ளவும்.

கேஸ் ஃபேன் மற்றும் முன் பக்க பேனல் கனெக்டர்கள் அமைத்தல்

கேஸ் ஃபேனை ஸ்க்ரு உதவியுடன் அதற்குரிய இடத்தில் பொருத்தவும். கேஸ் ஃபேன் பவர் கனெக்டரை மதர்போர்டு ஹெட்டருடன் இணைக்கவும். முன் பகுதியில் உள்ள ஆடியோ கனெக்டர்கள் மதர்போர்டு ஆடியோ ஹெட்டருடன் இணைக்கப்பட வேண்டும். அதே போல் முன் பகுதியில் உள்ள யு. எஸ். பி., கனெக்டர்களும் மதர்போர்டு யு. எஸ். பி., ஹெட்டர்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

அசெம்பிளிங் நிறைவு செய்தல்

இப்போது பக்கவாட்டில் திறக்கப்பட்டிருந்த பி. எஸ். யு., பாக்ஸினை ஸ்க்ரு உதவியுடன் கவனமாக மூடவும். மவுஸ், மானிடர், கீ போர்டு, ஸ்பீக்கர்கள் போன்றவற்றை இணைத்து கம்ப்யூட்டர் அசெம்பிளை நிறைவு செய்யவும்.


கம்ப்யூட்டர் அசெம்பிள் கற்றுக் கொள்வதால் உண்டாகும் பலன்கள்

தரமான பாகங்களை தேர்வு செய்து அசெம்பிள் செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். எதிர்காலத்தில் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் மாற்றி கம்ப்யூட்டரை மேம்படுத்தலாம். நமக்கு தேவையான பாகங்களை நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிதாக ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

Comments