தென்னிந்தியாவின் முக்கிய உணவுப். பொருளாக அரிசி உள்ளது. அரிசியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை அரிசியும் அதற்குரிய ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ளது.
| பாரம்பரிய அரிசி வகைகள் |
அரிசியின் பல வகைகளும், ஆரோக்கிய பலன்களும்
பாரம்பரிய அரிசி பல வகைகளில் உள்ளன. இவற்றில் கவுனி, சிவப்பு, மூங்கில், குள்ளக்கார், காட்டுயானம், கருங்குருவை, மாப்பிள்ளை சம்பா, கைக்குற்றல், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, ௧ல்லுருண்டை சம்பா, கிச்சிலி சம்பா, காடை சம்பா, காளான் சம்பா போன்றவை முக்கிய வகைகள்.
கவுனி அரிசி
பழங்காலத்தில் மன்னர்கள் இந்த அரிசியை வரும்பி சாப்பிட்டதால் அரசர் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் இருந்தாலும் சமைத்தபின் ஊதா நிறமாக மாறிவிடுகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள ஆக்சிடன்ட் சத்து என்று கூறப்படுகிறது.
ஆந்தோசயனின் உடலில் கெட்ட கொழுப்புகள் உருவாவதை தடுக்கிறது மேலும் புற்று நோய் வராமலும் ஆந்தோசயனின் தடுக்கிறது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும்
நீரிழிவு உள்ளவர்கள் தேவையான ஊட்டசத்தினை பெறவும் இது உதவுகிறது. குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்கள் இதில் உள்ளன. ரத்த அழுத்தம் நோய் உள்ளவர்கள் இதை உணாடால் அந் நோய் குணமாகும்.
சிவப்பு அரிசி
இந்த வகை அரிசி இதய நோய், ஆஸ்துமா, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கிறது.
இதிலிருந்து தயாரிக்கப்படும் ரைஸ் பிரான் ஆயில் உடம்பில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பாதுகாக்கிறது. இதிலுள்ள இரும்புச் சத்து ரத்த விருத்தி ஆவதற்கு உதவுகிறது. கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கான ஊட்டச்சத்துக்களை கொண்டது.
| சிவப்பு அரிசி |
மூங்கில் அரிசி
இதுவும் அதிக சத்துகள் நிறைந்த அரிசியாக உள்ளது. 60 வருடங்கள் வருடங்கள் முதிர்ந்த மூங்கிலில் இருந்து இது கிடைக்கும். அரிசி விளைந்த மூங்கில்கள் அதன் பின் இறந்து விடும் என்று கூறுகிறார்கள். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும் என்பதால் பழங்காலத்தில் மன்னர்கள் விரும்பி உண்டனர்.
மூங்கில் அரிசியில் அதிக அளவு புரதம், மக்னீசியம், காப்பர், துத்தநாகம், தையமின் ஆகியவை உள்ளன. இது முழங்கால், மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. உடல் பருமன் ஆவதையும், கெட்ட கொழுப்பு பிரச்சினைகளையும் தடுக்கிறது. அடிக்கடி உணவில் சேர்க்கும் போது மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது. இது உடலுக்கு அதிக உஷ்ணத்தை கொடுப்பதால் கர்ப்பிணிகள் இதை தவிர்ப்பது நல்லது. ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்களும் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதை உண்ணலாம்.
குள்ளக்கார் அரிசி
இது வருடம் முழுவதும் விளையக் கூடிய அரிசியாக உள்ளது. இரும்பு, துத்தநாகம் போன்றவை அதிகம் காணப்படுகறது. உடம்பில் கெட்ட கொழுப்பு சேராமல் தடுத்து ரத்த அழுத்த நோயிலிருந்து காக்கிறது. தோல் ஆரோக்கியத்தினை காத்து முதிர்ச்சியான தோற்றம் வராமல் இருக்க உதவுகிறது. மெதுவாக ஜீரணம் ஆவதால் பசி உணர்வை குறைத்து உடல் எடை அதிகம் ஆவதை தவிர்க்கிறது.
காட்டுயானம் அரிசி
இந்த அரிசி விளையும் வயலில் ஒரு காட்டுயானை நின்றால் கூட தெரியாத அளவுக்கு பயிர் வளர்வதால் இப்படி அழைக்கப்படுகிறது. கால்சியம் அதிக அளவு உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. தோல் வியாதியை குணமாக்குகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கருங்குருவை அரிசி
இந்த வகை அரிசியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன. தோல் ஆரோக்கியத்தை காக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற உணவாக இருக்கிறது. விஷக்கடியால் உண்டாகும் பக்க விளைவுகளை தடுத்து உடல் ஆரோக்கியத்தை காக்கிறது.
மாப்பிள்ளை சம்பா
இது சிவப்பு அரிசி வகைகளில் ஒன்று. மற்ற சிவப்பு அரிசி களைப் போலவே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்களும் கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன. புதுமண தம்பதியரின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு உதவுவதால் மாப்பிள்ளை சம்பா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பல வகையான நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல உணவாகிறது. நரம்புகளுக்கு வலுவளித்து உடல் சோர்வை தவிர்க்கிறது.
கைக்குத்தல் அரிசி
நோயின் காரணமாக பலவீனமானவர்களுக்கு இந்த அரிசி உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை உண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக உயரும். இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்ற உணவாகும்
அன்னமழகி அரிசி
அரிசி வகைகளிலேயே இனிப்பு சுவை அதிகம் உள்ள அரிசியாக இது உள்ளது. உடலில் பித்தம், உஷ்ணத்தை குறைத்து ஆரோக்கிய வாழ்வினை தருகிறது. சமைத்த அரிசியுடன் தயிர் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதால் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
இலுப்பைப்பூ சம்பா அரிசி
இந்த வகை அரிசி பயிர் செய்த 5 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிறது. உடலில் பித்தம், உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விட்டமின்களும், கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுப் பொருட்களும் உள்ளதால் பக்கவாதம், மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க உதவுகிறது.
பாரம்பரிய அரிசி வகைகள் ஏன் ஆரோக்கியமானவை?
பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்யும் போது உரம்,பூச்சிமருந்து என்று எதுவும் தேவைப்படாது. ஏனென்றால் இவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால் இவற்றை உட்கொள்ளும் போது நமக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
| பாரம்பரிய அரிசி வகைகள் |
மேலும் சாதாரண அரிசியை விட பல மடங்கு ஊட்டசத்துக்கள் இருப்பதால் உடல் பலம் பெருகச் செய்து ஆரோக்கியத்தை காக்கிறது.
இந்த நெல் வகைகள் வறட்சியை தாங்கும் என்பதால் வறட்சியான இடங்களில் கூட பயிர் செய்ய முடியும். உரம், பூச்சிமருந்து செலவு குறைவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
அன்றாட உணவில் இவற்றை எப்படி பயன்படுத்தலாம்?
இந்த வகை அரிசிகளை மதிய உணவில் சாதமாக தயார் செய்து சாப்பிடலாம். ஆனால், நாம் வழக்கமாக சாப்பிடும் அரிசி வகைகள் போல மென்மையாக இருக்காது. சற்று பசைத் தன்மையுடனும் பருக்கை பருக்கையாகவும் இருக்கும். இவற்றை தினமும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. வாரம் இரு முறை அல்லது ஒரு முறை மதிய வேளையில் உண்ணலாம்.
சாதமாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால் இட்லி,தோசை மாவு களில் கலந்து கொள்ளலாம். பனியாரம், ரொட்டி, அதிரசம் என்றும் நம் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் தயார் செய்து சாப்பிடலாம்
பாரம்பரிய அரிசிகளின் விலை
இவற்றின் உற்பத்தி குறைவு என்பதால் வழக்கமான அரிசி களை விட விலை சற்று அதிகமாக இருக்கும். பொதுவாக கடைகளில் இவற்றின் விலை கிலோ ரூ 80 முதல் ரூ 100 வரை இருக்கும்.
இவற்றில் கவுனி அரிசி விலை அதிகம். கடைகளில் கிலோ ரூ 200க்கு கிடைக்கிறது. மூங்கில் அரிசி கிடைப்பது அபூர்வம் என்பதால் கிலோ ரூ 500க்கு கிடைக்கிறது.
Comments
Post a Comment