உலகின் மூன்று மிகப் பெரிய மதங்கள்

மதம் மனித வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. உலகில் 4,000 வெவ்வேறு மதங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. 19 மதங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து, இவை மூன்றும் மிகப் பெரிய மதங்களாக உள்ளன. ஒவ்வொரு மதத்தினருக்கும் சொந்த நம்பிக்கைகள், கருத்துக்கள், தெய்வங்கள், புனித நூல்கள் உள்ளன.

உலகின் மிகப் பெரிய மதங்கள்

கிறிஸ்துவம்

உலகில் 250 கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் மதமாகவும், முதல் பெரிய மதமாகவும் கிறிஸ்துவம் உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 33 சதவீதம் ஆகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இம் மதத்தின் புனித நூல் ‛பைபிள்’ ஆகும். 

ஏசுநாதர்

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். அவரே பூமியையும், சொர்க்த்தையும் படைத்தார் என்றும்  அவர்கள் கூறுகின்றனர். அவரே தகப்பனாகவும், மகனாகவும் (இயேசு கிறிஸ்து) பரிசுத்த ஆவியாகவும் உள்ளார் என்று மேலும் நம்புகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி பேர் ரோமன் கத்தோலிக்கர்களாக உள்ளனர். ஒவ்வொரு மனிதனின் மரணத்திற்கும் பின்பு கிடைக்கக்கூடிய தீர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள். அவரவர் செய்த பாவம், புண்ணியங்களுக்கு ஏற்ப தீர்ப்பு உண்டு என்று இவர்கள் கூறுகின்றனர். சொர்ககம் என்பது ஆத்மா கடவுளுடன் இணையும் போது கிடைக்கும் பேரின்பம் தான் என்று கத்தோலிக்கர்கள் விளக்கம் அளிக்கின்றனர். எண்ணற்ற பாவங்களை செய்தவர்கள் முடிவில்லாத நரகத்தை அடைவார்கள் என்றும் நம்புகின்றனர். தெற்கு ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய மற்றும் தென்அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ரோமன் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். 

உலகில் உள்ள மொத்த கிறிஸ்துவர்களில் 40 சதவீதம் பேர் இரண்டாவதாக உள்ள புராட்டஸ்டன்ட் பிரிவில் உள்ளனர். இப்பிரிவில் உள்ள கிறிஸ்துவர்கள் கத்தோலிக்கர்கள் மற்றும் கிழக்கு ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துவர்களின் நம்பிக்கை மற்றும் கோட்பாடுகளை எதிர்க்கின்றனர்.இப்பிரிவு 16ம் நூற்றாண்டு காலத்தில் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது. இவர்கள் உண்மையான நீதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர், கொடுமையான பாவங்கள் செய்தவர்களுக்கும் மன்னிப்பு உண்டு என்ற கொள்கையை இவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

மூன்றாவது பிரிவாக உள்ள கிழக்கு ஆர்தோடெக்ஸ் பிரிவில் சுமார் 300 மில்லியன் கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்கள் பாலஸ்தீனம், கிரீஸ், ருமேனியா, ரஷ்யா போன்ற நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் மேற்கத்திய கிறிஸ்துத்திலிருந்து சிறிது மாறுபட்டுள்ளனர். ஆனால், கத்தோலிக்கர்கள் போலவே இவர்களும் ஒரே கடவுள் தகப்பனாகவும், மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் உள்ளார் என்று நம்புகிறார்கள். இவர்கள் ஞானஸ்நானம் கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ளனர். மரணத்திற்கு பிறகு பாவம் புரிந்த ஆத்மா சொர்க்கத்தை அடைந்து பரிசுத்த நிலையையும் இளமைத் தோற்றத்தையும் பெறும் என்று நம்புகின்றனர்.

இஸ்லாம்

இஸ்லாம் தத்துவத்தை உலக மக்களுக்கு எடுத்துரைப்பவர்கள் நபிமார்கள் என்றும், அவர்கள் உலக மக்களை நல்வழிப்படுத்த இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும் இஸ்லாம் கூறுகிறது. நபிமார்களில் இறுதியாக வந்த முகமது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான ‛குர்-ஆன்’ இஸ்லாமியர்களின் வேத நூலாக உள்ளது.இஸ்லாம் மதத்தில் சன்னி மற்றும் ஷியா என்ற இரு பிரிவுகள் உள்ளன.


ஒரு நாளில் 5 வேளை தொழுகை மேற்கொள்வது இஸ்லாமியர்களின் முக்கிய கடைமையாக பார்க்கப்படுகிறது. இஸ்லாம் மனித நேயத்தை போதிக்கிறது. இம்மத்தினை சேர்ந்த ஒவ்வொருவரும் வருடத்தின் ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு மேற்கொள்வது நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பெற உதவுகிறது. ஹஜ் யாத்திரை முஸ்லிம் ஒவ்வொருவரின் வாழ்நாளில் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது

இந்து

உலகின் மூன்றாவது பெரிய மதமாக இந்து மதம் உள்ளது. இதை 120 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். இது கி.மு 2300 வருடத்தில் தோன்றியதாக ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். இந்த மதத்தினை உருவாக்கியது யார் என்று இன்று வரை கண்டறியப்படவில்லை.

இது ஆரியர்களால் கொண்டு வரப்பட்டது என்றும் நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் நம்பப்படுகிறது. உண்மையே நிலையானது, ஒவ்வொருவரும் வாழ்வில் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், வேதங்கள் படித்தல், மோட்சத்தை அடைவதை நோக்கமாக கொள்ள வேண்டும் போன்றவை இம்மதத்தின் முக்கிய கொள்கைகளாக உள்ளன

ராதா கிருஷ்ணன் 

தென்னிந்தியாவில் இந்து மதத்தினர் சைவம், வைணவம் என்று இரண்டு பிரிவினராக இருந்தனர். சைவம் பிரிவினை சேர்ந்தவர்கள்  சிவபெருமானையும், வைணவ பிரிவினர் பகவான் கிருஷ்ணனையும் முக்கிய கடவுள்களாக வழிபட்டு வந்தனர். ஆனால், இன்று அனைத்து இந்து மதத்தினரும் இரு கடவுள்களையும் வணங்குகின்றனர்.  இந்து மதத்தின் மற்ற முக்கிய கடவுள்களாக சக்தி, லட்சுமி,சரஸ்வதி, விநாயகர், முருகன், ஐயப்பன், ஆஞ்சநேயர் மற்றும் கருப்பசாமி ஆகியோர் வணங்கப்படுகிறார்கள்

இந்து மதம் சைவ உணவுப் பழக்கத்தை வலியுறுத்துகிறது. இருப்பினும் பெரும்பாலான இந்து  மதத்தினர் அசைவ உணவு உண்ணும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். விரதம் மேற்கொள்ளுதல், பாதயாத்திரை செல்லுதல், முக்கிய கோவில்களுக்கு சென்று நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுதல் போன்றவற்றை இந்துக்கள் கடைப்பிடிக்கின்றனர்.

மற்ற முக்கிய மதங்கள்

கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து மதங்களை தவிர புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் போன்ற மதங்களும் முக்கிய மதங்களாக உள்ளன. இவற்றில் புத்தமதம் உலகின் 5 வது பெரிய மதமாக உள்ளது. உலகில் சுமார் 50 கோடி பேர் புத்த மதத்தினை சார்ந்து உள்ளனர். கி.மு., 483ல் தோன்றிய புத்த மதம் பூடான், மியான்மர், கம்போடியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாம், திபெத், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது.

ஜைன மதம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகும். ஜைன மதத்தினை உலக அளவில் சுமார் 60 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். இந்தியாவில் மட்டும் 45 லட்சம்  ஜைன மதத்தினர் உள்ளனர். அமெரிக்கா,  கென்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஜைன மதத்தினர் வசிக்கின்றனர்.

சீக்கிய மதம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 15ம் நூற்றாண்டில் தோன்றியது. குருநானக் என்பவரால்  இம்மதம் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 2.4 கோடி சீக்கியர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியா தவிர இந்தோனேசியா, இத்தாலி, அயர்லாந்து போன்ற நாடுகளில் சீக்கிய மதம் பரவியுள்ளது.

மதங்களால் ஏற்படும் நன்மைகள்

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு மதங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் மதத்தின் முக்கிய கோட்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்கும் போது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. மத நம்பிக்கையின் காரணமாக மனிதர்கள் முதுமை காலத்தில் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையினை வாழ முடிகிறது

Comments